- உங்கள் குழந்தையின் உதடுகள் பிறந்த பொழுது இருந்ததைப் போல எபோழுதும் சிவப்பாக இருக்க வேண்டுமா? உங்கள் குழந்தைக்கு பிறந்தது முதல் ஒவொரு தடவையும் தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன் குழந்தையின் உதடுகளை நல்ல ஈரத்துணி கொண்டு துடைக்கவும். தங்களின் குழந்தையின் உதடுகள் சிவப்பாக அழகாக இருக்கும்.
- உங்கள் பெண் குழந்தையின் காதருகில் கிருதா போல் முடி இருந்தால் அழகாக இருக்கும் என்று விரும்புகிறீர்களா? கவலையை விடுங்கள் விடுங்கள். பிறந்தது முதலே தலைக்கு எண்ணை தடவும் போதெல்லாம் காதோரமும் எண்ணைதடவி வர உங்கள் குழந்தைக்கும் கிருதா போல் முடி வளரும்.
- உங்கள் குழந்தை கிழே விழுந்து அடிபட்டு மூக்கில் ரத்தம் வருகிறதா? உடனே பயபடாமல் குழந்தையை தூக்கி படுக்கவைத்து சிறு பஞ்சினால் மெதுவாக, மிருதுவாக துடைக்கவும். இந்த நேரத்தில் மூக்கை சிந்தவோ, உரிஞ்சவோ கூடாது. சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நின்று விட்டால் பயம் ஒன்றும் இல்லை. ரத்தம் நிற்காமல் தொடருமேயானால் மருத்துவரிடம் செல்வது உசிதம்.
- குழந்தைகளை என்ன தான் கவனத்துடன் பார்த்துக் கொண்டாளும் சிறு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டுவிடும். பலரும் தீகாயம் ஏற்பாட்டவுடன் மேலே எண்ணெய் மற்றும் பல மருந்துகளை தடவுவார்கள். அனால் பலரும் அறியாத ஒன்று, தீக்காயம் பட்டவுடன்தான் மேல் சில்லென்று தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது தான். 5 நிமிடம் கழித்து எண்ணை அல்லது மருந்து போட்டால் தீக்காயம் பட்ட அடையாளமே தெரியாமல் அழிந்து போய்விடும். தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சொன்னார்கள் என்று நின்று நிதானமாக 5 நிமிடம் கழித்து ஊற்றினால் கொப்புளம் தான் வரும். தீக்காயம் பட்டவுடன் உடனடியாக அந்த இடத்தில் தண்ணீரை ஊ ற்ற வேண்டும். இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- குழந்தைகளுக்கு உடல் சூட்டின் காரணமாக அடிக்கடி மலம் கட்டிப் போய் மலம் கழிக்க சிரமப்படுவார்கள். இதற்காக பலரும் மருத்துவரை நாடுவதும் உண்டு. ஆனால் இதை எளிமையாக சரி செய்யலாம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தால் உளர் திராச்சை 3 அல்லது 5 எடுத்து இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை அந்த திராட்சையை அந்த தண்ணீரிலேயே மசித்து வடிகட்டி தண்ணீரை மட்டும் 2 அல்லது 3 பாலாடை கொடுத்தால் குழந்தை சுலபமாக மலம் கழிக்கும். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் அதே உலர் திராட்சையை 2 அல்லது 3 தினமும் காலையில் கொடுத்து வர குழந்தைகள் சுலபமாக மலம் கழிக்கும்.
- குழந்தைகளுக்கு வளரும் பருவத்தில் அவர்களின் வளர்ச்சிக்கு ப்ரோடீன் அதிகம் தேவை என்பதால் பல தாய்மார்களும் உணவில் பருப்பு அதிகம் சேர்த்துக்கொள்வார்கள். அனால் பலரும் அறியாத ஒன்று அதிக பருப்பு சேர்த்துக்கொள்வதால் சில குழந்தைகள் வாயுத் தொல்லை ஏற்பட்டு அடிக்கடி வயிற்று வலியால் அவதிபடுவார்கள். இதனால் பயப்பட வேண்டியதில்லை. குழந்தைகளுக்கு பருப்பு வேகவைக்கும்போழுது 2 அல்லது 3 பூண்டு பற்களை சேர்த்து வேகவைத்துக் கொடுத்தால் வாயுத்தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
- நாம் பலரும் அறியாமல் செய்யும் ஒரு தவறு என்னவென்றால் குழந்தைகளுக்கு உணவூட்டும்பொழுது இது கசக்கும் வேண்டாம், இது புளிக்கும் வேண்டாம் என்று நம்முடைய அனுபவத்தை அவர்கள் முன்னால் சொல்வது. உண்மையில் குழந்தைகள் 1 வயதிற்கு மேல் தான் ருசித்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். அதனால் நம்முடைய விருப்பத்தை அவர்கள் மேல் திணிப்பதை நிறுத்திவிட்டு அவர்களுக்கு அனைத்து சுவைகளையும் 6 முதல் 1 வயதிற்குள்ளாக நாம் அறிமுகபடுத்திவிட்டால் பிற்காலத்தில் குழந்தை இது வேண்டாம் என்று எந்த உணவையும் கூறாது.
0 comments:
Post a Comment